News December 14, 2025

CSK குறிவைக்கும் முக்கிய வீரர்கள்!

image

2025 IPL-ல் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால், இம்முறை ஏலத்தில் சூப்பர் ஃபார்மில் இருக்கும் வீரர்களை வாங்க CSK முனைகிறது. ₹43 கோடி வைத்துள்ள CSK-வின் பிரதான டார்கெட் கேமரூன் கிரீன் அல்லது லியம் லிவிங்ஸ்டனாக இருக்கக்கூடும். டெத் பவுலிங்கிற்காக மதீஷா பதிரானாவை மீண்டும் குறைந்த விலையில் வாங்க முயற்சிக்கும். ஜடேஜாவின் இடத்தை நிரப்பிட உள்ளூர் லீக்கில் கலக்கும் பிரசாந்த் வீரை வாங்க CSK குறிவைத்துள்ளது.

Similar News

News March 2, 2026

ஈரானின் தாக்குதலுக்கு மோடி கண்டனம்

image

போர் நடைபெறும் பஹ்ரைன், சவுதி நாட்டு தலைவர்களுடன் PM மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இதனையடுத்து பஹ்ரைன் மற்றும் சவுதி மீதான தாக்குதலை கண்டிப்பதாக X தளத்தில் பதிவிட்டுள்ள PM, இந்தியா அவர்களுக்கு துணை நிற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுத்த அவர்களுக்கு மோடி நன்றியும் தெரிவித்துள்ளார்.

News March 2, 2026

தமிழக தேர்தல் தேதி.. வெளியானது Update

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் மொத்தமாக 5 கட்டங்களாக தேர்தல் நடத்த ECI திட்டமிட்டுள்ளது. அதன்படி, அடுத்தவாரம் தேர்தல் தேதியை CEC ஞானேஷ் குமார் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. கடந்த முறை போன்று ஏப்ரலில் அல்லாமல், மே மாதமே தேர்தல் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

News March 2, 2026

விஜய் பட தயாரிப்பாளருக்கு வந்த அடுத்த சோதனை!

image

ஜனநாயகனை அடுத்து யஷின் ’டாக்ஸிக்’ படத்தை தயாரித்துள்ளது KVN நிறுவனம். அப்படம் ரீலிசாகும் மார்ச் 19-ம் தேதி அன்று ’துரந்தர் 2’-ம் ரிலீசாகிறது. டாஸ்ஸிக் ரன்னிங் டைம் 3.25 மணி நேரமாகவும், துரந்தர் 2 ரன்னிங் டைம் 3.40 மணி நேரமாகவும் இருப்பதால் எந்த தியேட்டரிலும் கூடுதல் காட்சிகள் திரையிட முடியாத நிலை. இதனால் தியேட்டர் ஓனர்கள் படத்தின் ரன்னிங் டைமை குறைக்க கோரி KVN-க்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!