News December 14, 2025

நாகை: இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த வறுமையில் வாழும் நபர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மின் மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கு 20-45 வயதுக்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக உள்ள நபர்கள், ஆட்சியர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 3, 2026

நாகை: கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

image

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து மார்ச் 6ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல், போக்குவரத்து சேவை வானிலை சரியானதால் மீண்டும் மார்ச் 6-ல் தொடங்கப்பட உள்ளது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

News March 3, 2026

நாகை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 3, 2026

நாகை: திமுக சார்பில் விருப்பம் மனு தாக்கல்

image

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ஷீதர் மற்றும் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் முன்னிலையில், நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. பாரிபாலன் விருப்பமனு அளித்தார்.

error: Content is protected !!