News December 14, 2025

நலமுடன் இருக்கிறார் நல்லகண்ணு

image

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இன்று காலை மூச்சுதிணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் இருப்பதாகவும், டாக்டர்களின் ஆலோசனைப்படி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 23, 2026

மாதவிடாய் நேரத்தில் கடவுளை தரிசிக்கலாமா?

image

புனித யாத்திரையின்போது மாதவிடாய் ஏற்பட்டால் கடவுளை தரிசிக்கலாமா? இந்த சந்தேகத்தை ஆன்மிக குரு பிரேமானந்த் மகாராஜ் தெளிவுப்படுத்தியுள்ளார். ‘மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று, பாவச் செயல் அல்ல. மாதவிடாய் ஏற்பட்டால் குளித்துவிட்டு தூரத்தில் இருந்து கடவுளை வணங்கலாம். அதேநேரம், பூஜை பொருள்களை தொடக் கூடாது. பிரசாதம் சமைக்கக் கூடாது. தூய பக்தியே இறைவனுக்கு தேவையானது’ என அவர் தெரிவித்துள்ளார்.

News March 23, 2026

புதுச்சேரியில் காங்கிரசுக்கு 16.. திமுகவுக்கு 12..!

image

புதுச்சேரியில் கடும் இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி காங்.,-16, திமுக-12, விசிக-1, CPI-1-ல் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 30 தொகுதிகளுக்கும் காங்கிரஸ், திமுகவினர் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், தற்போது தொகுதிப் பங்கீட்டின் அடிப்படையில் வேட்புமனுக்களை திரும்பப் பெற கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 23, 2026

பயந்துவிட்டாரா டிரம்ப்?

image

ஈரானை மிரட்டிக் கொண்டிருந்த டிரம்ப் திடீரென 5 நாள் போர்நிறுத்தம் அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து எல்லா நாடுகளையும் நெருக்குகிறது. மேலும், இந்த போருக்கு ₹2 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டும் அமெரிக்காவால் வெற்றியை நெருங்க முடியவில்லை. இதற்கு மேல் இழப்புகளை தாங்க முடியாது என்றே டிரம்ப் இம்முடிவை எடுத்திருப்பார் என நிபுணர்கள் கூறுகின்றனர்

error: Content is protected !!