News December 14, 2025
சங்கரன்கோவிலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர் (36). இவரது 1½ வயது ஆண் குழந்தை தீரன் நேற்று முன்தினம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தான். குழந்தையை உடனைடியாக குடும்பத்தார் மீட்டு சங்கரன்கோவில் G.H-லும், மேல் சிகிச்சைக்காக பாளை G.H-க்கும் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை தீரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் விசாரணை.
Similar News
News January 25, 2026
தென்காசி: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM!

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News January 25, 2026
தென்காசி: கட்டடத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சுடலைமுத்து (55). இவர் கடந்த 13ம் தேதி கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் பணியில் இருந்தபோது கட்டடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
ஆலங்குளம் அருகே திமுக நிர்வாகி கைது!

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல் முருகன் (52). இவருக்கும் சில்வார்குளம் பகுதியில் செயல்படும் காற்றாலை நிறுவனத்திற்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காற்றாலை மேலாளர் பாலாஜிக்கும், கதிர்வேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கதிர்வேல், பாலஜியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் கதிர்வேலை கைது செய்தனர்.


