News December 14, 2025
சிவகாசியில் பட்டாசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி மீனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளியான மதியழகன் (55). இவர் தீராத வயிறு வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று அவருக்கு வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி அல்போன்ஸ் மேரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News December 31, 2025
விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 31, 2025
காரியாபட்டி: பருத்திவீரன் திரைப்பட பாட்டி காலமானார்

கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் ஊரோரம் புளியமரம் எனும் பாடல் மூலம் பிரபலமானவர் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75). விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், வயது மூப்பு, உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் இன்று தனது சொந்த ஊரில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
News December 31, 2025
விருதுநகர்: விபத்தில் சிக்கி கவுன்சிலர் பரிதாப பலி

சாத்தூர் நகராட்சியில் கவுன்சிலராக தெய்வானை (55) இருந்து வந்தார். இவர் நேற்று டூவீலரில் தாயில்பட்டியில் இருந்து சாத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை பள்ளத்தில் டூவீலர் தடுமாறியதில் அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


