News December 14, 2025

பெரம்பலூர்: மாணவர்களுக்கு ரூ.12000 உதவி தொகை

image

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 2 வரை படிக்க உதவி தொகை பெற, தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்ட தேர்வுகள் நடத்தி, தேர்வு செய்ய உள்ளனர். விண்ணப்பங்களை டிச,15-க்குள் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, கட்டண தொகை ரூ.50 அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் டிச.20-க்குள் ஒப்படைக்க அரசு தேர்வு குழு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 19, 2025

JUST IN: பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் தகவல் வெளியாகியது. அதில், SIRக்கு முன் 5,90,490 வாக்காளர்கள் மொத்தமாக இருந்த நிலையில், SIRக்கு பின் 5,40,942 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ‎49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

News December 19, 2025

பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

image

பெரம்பலூர், துறைமங்கலம் பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நீரஜ்கர்வால், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்த பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News December 19, 2025

பெரம்பலூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பெரம்பலூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN அட்டை தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <>இந்த <<>>லிங்க் மூலம் உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஷேர்

error: Content is protected !!