News December 14, 2025
மதுரை: மூதாட்டியிடம் செயின் பறிப்பு; CCTV யில் சிக்கிய மூவர்

மதுரை மாவட்டம், தனிச்சியத்தை சேர்ந்த செல்லம்மாள்(80), 2 நாட்களுக்கு முன் இரவு வீட்டின் முன்பு இருந்தபோது 2 பேர், அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறிக்க முயல, செயின் அறுந்தது. அதில் 3 பவுன் செயினை அறுத்து கொண்டு தப்பினர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து சந்தோஷ் பரமன்(23) ,கருப்புசாமி(23), தென்னரசு(23) ஆகிய 3 பேரை கைது செய்து 3 பவுனை வாடிப்பட்டி போலீசார் இன்று மீட்டனர்.
Similar News
News March 6, 2026
மதுரை: வயலுக்குள் கவிழ்ந்த அரசு பஸ்

வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான் செல்லும் பாதையில் அரசு பஸ் டிப்போ அமைந்துள்ளது. காலை டிரைவர் மகாலிங்கம் பஸ்சை எடுத்து வெளியே வந்தவர் நிறுத்திவிட்டு சாமி கும்பிட கீழே இறங்கி உள்ளார். எஞ்சின் ஓடி கொண்டிருந்ததால் பஸ் தானாக கிளம்பி எதிரே இருந்த தடுப்பு சுவரை தாண்டி வயல்வெளியில் தலைகீழாக கவிழ்ந்தது. டெப்போவில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக கிரைன் மூலம் பஸ்சை வெளியில் எடுத்தனர்.
News March 5, 2026
மதுரை : வீடு, நில பத்திர உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

மதுரை மக்களே, இங்கு <
News March 5, 2026
மதுரை : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…


