News December 14, 2025
நெல்லை பெண்ணிடம் ரூ.6.89 லட்சம் நூதன மோசடி

தாழையூத்தை சேர்ந்த தீபா என்பவர் (45), பகுதிநேர வேலை என்ற பேஸ்புக் விளம்பரத்தை நம்பி, ஆன்லைன் ஹோட்டல் ரிவ்யூ மோசடியில் ஈர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் சிறிய தொகை தந்து நம்பிக்கை ஏற்படுத்திய மர்மகும்பல், பின் ரூ.6.89 லட்சம் பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு அனுப்ப வைத்து, திரும்பப் பெற முயலும்போது மேலும் பணம் கேட்டனர். மோசடியை உணர்ந்த தீபா புகாரளித்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 17, 2025
நெல்லை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்! APPLY

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது நெல்லை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க
News December 17, 2025
நெல்லை: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

நெல்லை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News December 17, 2025
நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு!

டிசம்பர் மாதத்திற்கான நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தற்போது மாற்றி வைக்கப்பட்டு 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம்.


