News December 14, 2025

சிவகங்கை: டூ வீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி.!

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கொழுவூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் தனது மனைவி கலைவாணியுடன் பரமக்குடியில் இருந்து ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கலைவாணி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News March 3, 2026

சிவகங்கை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

சிவகங்கை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு.

image

மானாமதுரை: ரயில் எண் 16128 குருவாயூர்- சென்னை எழும்பூர். திண்டுக்கல் தண்டவாள பாதையில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மார்ச் -04 முதல் மார்ச்-29 ந் தேதி வரை வழக்கமான திண்டுக்கல் பாதையில் செல்லாமல், மாற்று பாதையாக மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்கள் வழியாக நின்று செல்லும். இந்த சேவையை சிவகங்கை மாவட்ட பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News March 3, 2026

சிவகங்கை : டிப்ளமோ முடித்தவர்களுக்கு AIIMS வேலை.!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: CLICK HERE.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!