News December 14, 2025
₹56,000 வரை சம்பளம்.. அப்ளை பண்ண இன்றே கடைசி

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 362 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் 18-25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். முதல்நிலை, மெயின்ஸ் ( Tier 1, Tier 2) என மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். இப்பணிக்கு குறைந்தபட்சமாக ₹18,000 முதல் அதிகபட்சமாக ₹56,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு <
Similar News
News December 27, 2025
ஒரே வீச்சில் கடல் கடந்து சாதனை PHOTOS

மணிப்பூரைச் சேர்ந்த 3 பருந்துகள், உலகின் மிகவும் அசாதாரணமான பயணங்களில் ஒன்றை நிறைவு செய்துள்ளன. ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் 5,000–6,000 கி.மீ. தூரம் பறந்து ஆப்பிரிக்காவை அடைந்துள்ளன. ஒரே வீச்சில் ஓய்வில்லாமல் கடலை கடந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய வனவிலங்கு விஞ்ஞானிகள், பருந்துகளின் சாட்டிலைட் டிரான்ஸ்மிட்டர்களை பொருத்தி, அவற்றின் இருப்பிடம் குறித்த தகவல்களை சேகரிக்கின்றனர்.
News December 26, 2025
ஜனவரியில் மேலும் விடுமுறை.. பள்ளி மாணவர்கள் குஷி

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் ஜன.5-ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை நாள்காட்டிபடி, ஜனவரியில் மேலும் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அதாவது, ஜன.15, 16, 17-ல் பொங்கல் பண்டிகை, ஜன.26 -ல் குடியரசு தினம் ஆகிய நாள்களில் பள்ளிகள் செயல்படாது. மேலும், 2026-ல் மொத்தமாக பள்ளிகளுக்கு 26 நாள்கள் அரசு விடுமுறையாகும். தொடர் விடுமுறையை கொண்டாடுங்கள் மாணவர்களே!
News December 26, 2025
F1 பட வசூலை முறியடித்த அவதார்!

நடப்பாண்டில் ரிலீஸ் ஆன ஹாலிவுட் படங்களிலேயே இந்தியாவில் அதிக வசூலை பெற்று ஜேம்ஸ் கேமரூனின் ‘Avatar Fire and Ash’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. கடந்த 19-ம் தேதி வெளியான இப்படம் 7 நாள்களில் சுமார் ₹131 கோடியை வாரி குவித்து, பிராட் பிட் நடிப்பில் வெளியான F1 படத்தின் சாதனையை(₹20.75) முறியடித்துள்ளது. மேலும் உலகளவில் இந்திய மதிப்பில் சுமார் ₹4,000 கோடியை அவதார் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


