News December 14, 2025
கடலூர்: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

கடலூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 29, 2025
கடலூர்: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 29, 2025
கடலூர்: போலி நகைகள்-எஸ்.பி எச்சரிக்கை!

கடலூர் மாவட்டத்தில் நகை அடகு பிடிக்கும் பேங்க்கர்ஸ் மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் நகை ஒரிஜினலா என்பதை நகை மதிப்பீட்டாளர் மூலம் தெரிந்து கொண்ட பின்னரே நகைக்கு பணம் கொடுக்க வேண்டும் என எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆதார் கார்டில் உள்ள போட்டோ, வந்திருப்பவரின் முகத்துடன் சரியாக உள்ளதா எனவும், ஆதார் கார்டு உண்மைதானா எனவும் நன்கு விசாரித்து பணம் வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
News December 29, 2025
கடலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26,B.26,C.26,D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


