News December 14, 2025
ராமநாதபுரம்: ஒரே நாளில் 1415 வழக்குகளுக்கு தீர்வு

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம், பரமக்குடி, முதுகுளத்துார், திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 10 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு லோக் அதலாத் நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள சிவில், வங்கி வாராக் கடன்கள் விசாரிக்கப்பட்டன. மொத்தம் 2768 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1415 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 6 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 233 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
Similar News
News March 4, 2026
முதுகுளத்தூர்: தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கல்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச்.03) இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர், முதுவை பாரூக் விருப்பமனுவை வழங்கினர்.
News March 4, 2026
இராமநாதபுரம்: தெரு நாய்கள் கடித்து பலியான 20 உயிர்கள்

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள எஸ்.கீரந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தூா்பாண்டி. விவசாயியான இவா் தனது சொந்த ஊரில் 120 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். அவ்வாறு வளர்க்கப்பட்ட செம்மறி ஆடுகளை நேற்று (மார்ச்.03) தெருநாய்கள் கடித்து 20 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. தெருநாய்கள் கடித்து இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
News March 4, 2026
இராம்நாடு மக்களுக்கு அரசு சார்பில் அருமையான வேலை!

ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக மாவட்ட வனத்துறையின் சார்பில் பயணிகள் பேருந்து இயக்கம், விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக (தற்காலிக பணி) மாதம் ரூ.18,500 சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் ராமநாதபுரம் வன உயிரின கோட்டம் அலுவலகத்தை அணுக வேண்டும். (இராமேஸ்வரம் தீவு பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை) *SHARE


