News December 14, 2025
நெல்லை: ECR ல் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே, நவ்வலடி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று (டிச.13) இரவு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்த இருவர், திடீரென ஆத்தங்கரை பள்ளிவாசல் என்னுமிடத்தில், திடீர் விபத்து ஏற்பட்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
நெல்லையில் இனி 1000 பேருக்கு IT வேலை

ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், நெல்லை, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 – 1,000 பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT
News January 1, 2026
நெல்லை: ஜன.4 முதல் வீடு தேடி வரும்

தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் மாதம்தோறும் 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடங்களுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு ஜனவரி மாதத்தில் வருகிற 4, 5 ஆம் தேதிகளில் ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வினியோகம் செய்யப்பட உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட பயனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
நெல்லை: ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY

நெல்லை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <


