News December 14, 2025

தருமபுரி: பெற்ற மகளை பொய் சாட்சியாக்கிய ஆசிரியர்!

image

தருமபுரியை சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் (45). இவரது மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். சரவணன், ஜூன்-16ல், தன் நண்பர்கள் இருவர், மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பின் நீதிமன்றத்தில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், நண்பர்களை பழி வாங்க, தன் தந்தை சரவணன் பொய் புகார் கொடுத்ததாக கூறினார். இதையடுத்து, சரவணனை போக்சோவில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Similar News

News December 24, 2025

தருமபுரி: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

image

தருமபுரி மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். <>இங்கு க்ளிக் <<>>செய்து, பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அந்த இணையதளத்தில் உள்ளிடுங்கள். உங்களுடைய பிறப்பு சான்றிதழை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அனைவருக்கும் உதவும் இந்த முக்கிய தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News December 24, 2025

தருமபுரி: சொந்த ஊருக்கு திரும்பியவர் தற்கொலை!

image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாப்பம்பாடியைச் சேர்ந்த சுரேஷ் (47), குடும்பத் தகராறு காரணமாகத் தனது சொந்த ஊரில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். ராசிபுரத்தில் வசித்து வந்த அவர், மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் ஊருக்குத் திரும்பிய நிலையில் இம்முடிவை எடுத்துள்ளார். உறவினர்களால் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.

News December 24, 2025

தருமபுரி: மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த ஆடிட்டர்!

image

தருமபுரி பழைய ரயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் சையது அகமது என்ற ஆடிட்டரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் பூத்தொட்டியில் 2கஞ்சா செடிகளை வளர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்து, சையது அகமதைக் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!