News December 14, 2025

மோடிக்கு தமிழ் மீது அக்கறை இல்லை: கார்த்தி சிதம்பரம்

image

ஒரு மாநிலத்தின் தேர்தல் இலக்கணம் மற்றொரு மாநிலத்துக்கு பொருந்தாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தேர்தல் வரும்போது தமிழகத்திற்கு அடிக்கடி வரும் மோடி, அமித்ஷா தமிழ் உணவு, தமிழ் மொழிதான் பிடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மையில் புலம்பெயரும் பறவைகளைப் போல தேர்தலுக்காக வந்துவிட்டு செல்வார்களே தவிர, அவர்களுக்கு தமிழ், தமிழகத்தை பற்றி எந்த அக்கறையும் இருக்காது எனவும் விமர்சித்தார்.

Similar News

News March 19, 2026

நம்பர் முக்கியமில்ல, மெம்பர் தான் முக்கியம்: ECI அசத்தல்

image

ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதற்கு இது சிறந்த உதாரணம். நெல்லை அம்பை தொகுதிக்குட்பட்ட மாஞ்சோலை அடுத்த ஊத்து பகுதியில் 10 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்காக தரைப்பகுதியிலிருந்து 40 கிமீ தூரத்திலான மலைப் பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. அதேபோல், 5 வாக்குகளுக்காக கொல்லிமலை எஸ்டேட்டிலும் வாக்குச்சாவடி அமையவுள்ளது. Great!

News March 19, 2026

ஆதவ்வால் ஆனந்த் தரப்பு அதிருப்தியா?

image

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் இடையே மோதல்போக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், RK நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் சில தொகுதிகளை ஆதவ் தரப்பு கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இது, இந்த தொகுதிகளில் களப்பணியாற்றி வந்த ஆனந்த் தரப்பினருக்கு வருத்தம் அளித்துள்ளதாம். இதுதொடர்பாக முறையிட்ட நிர்வாகிகளிடம், தன்னையே பாஜகவுடன் பேசுவதாக விஜய் வரை புகார் கூறிவிட்டனர் என ஆனந்த புலம்புவதாக கூறப்படுகிறது.

News March 19, 2026

Ph.D மாணவர்களுக்கு மாதம் ₹50,000 அறிவிப்பு!

image

அண்ணா பல்கலை & அதன் அரசு, உறுப்பு கல்லூரிகளில் உள்ள 250 இடங்களுக்கான Ph.D மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலையில் Ph.D படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊக்கத்தொகை ₹25,000-ல் இருந்து ₹50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு & உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கும் முதல்முறையாக ₹50,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க<> இங்கே<<>> கிளிக் செய்யவும்.

error: Content is protected !!