News December 14, 2025

பெரம்பலூரில் வாகனங்கள் பொது ஏலம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில், கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 நான்கு சக்கர, 1 மூன்று சக்கர மற்றும் 12 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில், ஏலம் விடப்பட்டது. மேலும் இந்த பொது ஏலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஏலம் கேட்டனர்.

Similar News

News March 3, 2026

பெரம்பலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 3, 2026

பெரம்பலூர்: தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி!

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு எவ்வாறு பணியில் ஈடுபட வேண்டும், எவ்வாறு விரைவாக செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

News March 3, 2026

பெரம்பலூர்: 69 பேர் பொதுத்தேர்வு எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் நேற்று 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசுப் பொதுத்தேர்வு நடைபெற்றது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 36 தேர்வு மையங்களில் 82 பள்ளிகளைச் சேர்ந்த 7,276 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 7207 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 69 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!