News December 14, 2025

ரஷ்யா-உக்ரைன் போரில் உச்சக்கட்ட பதற்றம்!

image

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசாவில், 450-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், மின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதால், நகரமே இருளில் மூழ்கியுள்ளது. ஒடேசா துறைமுகம் மீது மிக சக்திவாய்ந்த கின்சல் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா இந்த ஏவுகணையை பயன்படுத்துவது முதல்முறை என்பதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 3, 2026

தருமபுரி: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில்<> mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 3, 2026

திமுகவில் யார் யாருக்கு ராஜ்யசபா சீட்

image

கூட்டணி முடிவை இன்றுக்குள் அறிவிக்க காங்கிரஸுக்கு திமுக கெடு விதித்துள்ளது. அப்படி அறிவிக்கவில்லை என்றால், இன்றே ராஜ்யசபா வேட்பாளர்களை திமுக அறிவிக்கவுள்ளது. அதன்படி திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் காங்கிரஸுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் 3-வது வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News March 3, 2026

மீண்டும் எம்பி ஆகிறாரா தம்பிதுரை?

image

அதிமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக மீண்டும் தம்பிதுரை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா சீட்டுகளில் 2 இடங்கள் அதிமுகவிற்கு கிடைக்கும். இதில் ஒரு ராஜ்யசபா சீட்டை கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு (அன்புமணி) கொடுக்கவும், மற்றொன்றில் தம்பிதுரையை களமிறக்கவும் EPS திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!