News December 14, 2025

நாகை: இலவச IRON BOX பெற விண்ணப்பிக்கலாம்

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சார்ந்த சலவை தொழிலாளிகள் திரவ பெட்ரோலியத்தால் இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளை (IRON BOX) பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 15, 2025

நாகை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.com இணையதளத்தில்<<>> பார்க்கலாம் அல்லது நாகை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும்.

News December 15, 2025

நாகை: அரசு வங்கியில் வேலை – APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 15, 2025

நாகை: முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்

image

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவில் ஆங்கில கட்டுரைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் அத்திப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் யோகேஸ்வரன் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதையடுத்து பள்ளியில் யோகேஸ்வரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினார். மேலும் இவ்விழாவில், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!