News April 29, 2024
கோவை தேர்தல் முடிவு குறித்த வழக்கில் நாளை விசாரணை

கோவையில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கக் கோரியும், தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்த உயர் நீதிமன்றம், நாளை விசாரணையை தொடங்குகிறது.
Similar News
News February 2, 2026
தேமுதிக வைத்த டிமாண்ட்.. டென்ஷனில் திமுக, அதிமுக

கூட்டணியில் தேமுதிகவை இணைக்க திமுக, அதிமுக தயக்கம் காட்டுவதற்கு, பிரேமலதா வைக்கும் டிமாண்டே காரணமாம். 20 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் என்ற டிமாண்டுக்கு, அதிமுக 6-10 தொகுதிகள் தரலாம் என்றும், அதைவிட குறைவான எண்ணிக்கையே சாத்தியம் எனவும் திமுக தலைமை கூறியதாம். இதனிடையே, பிரேமலதாவை DCM ஆக்குவோம்; நாங்கள் இன்றி ஆட்சியமைக்க முடியாது என LK சுதீஷ் பேசியது இருபெரிய கட்சிகளுக்கும் எரிச்சலை தந்துள்ளதாம்.
News February 2, 2026
திமுகவில் இணைந்தார்.. அன்புமணி அதிர்ச்சி

வன்னியர் பாதுகாப்பு பேரியக்க தலைவர் செந்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். புதுவை திமுக தேர்தல் பொறுப்பாளரும், MP-யுமான ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டில் இந்த இணைப்பு நடந்துள்ளது. வரும் தேர்தலில் புதுவையில் திமுக- காங்., கூட்டணி ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களுடன் மாற்றுக் கட்சியினரை தங்கள் வசம் இழுத்து வருகின்றனர். செந்தில் திமுகவில் இணைந்தது அன்புமணி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News February 2, 2026
தவெகவில் இணைய OPS-க்கு அழைப்பு

அதிமுகவில் இணைய OPS விரும்பினாலும், அதற்கு வாய்ப்பில்லை என EPS திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தவெகவில் OPS இணைய வேண்டும் என அவருடைய ஆதரவாளராக இருந்த ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் OPS நல்ல முடிவெடுப்பார் என்று நம்புவதாகவும், அவர் தவெகவிற்கு வருவது தான் நல்ல முடிவாக இருக்கும் எனவும் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார். விஜய்யின் தலைமையை OPS ஏற்பாரா?


