News December 14, 2025
கரூர்: விசாரணை வளையத்தில் விஜய்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விஜயிடம் விரைவில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இந்தநிலையில் விஜயிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 16, 2025
கரூர்: NO EXAM ரயில்வே வேலை…அரிய வாய்ப்பு!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த லிங்கை<
News December 16, 2025
அரவக்குறிச்சி அருகே சோகம்: சிறுமி உயிரிழப்பு

அரவக்குறிச்சி, தொக்குபட்டியை சேர்ந்தவர் சங்கர். இவரின் மகள் தர்ஷனா 13. சின்னதாராபுரம் அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அவருக்கு வாந்தி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சங்கர் அளித்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
News December 16, 2025
கெட்டுப்போன மிட்டாய் கரூர் பெற்றோர்களே உஷார்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் முத்து என்பவர் குடை மிட்டாய் வாங்கியுள்ளார். அதில் புழு வண்டுகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி கெட்டுப்போன மிட்டாய் வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூபாய் 2000 அபராதம் விதித்தார். மேலும் பல்வேறு கடைகளில் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது!


