News December 14, 2025
தாராபுரம் அருகே சோகம்: பள்ளி மாணவர் உயிரிழப்பு!

குண்டடம் தாலுகா ருத்ராவதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி(15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் ஸ்ரீ ஹரி உடல்நிலை மோசமானது. இதனால் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீ ஹரி உயிரிழந்தார். இது குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
திருப்பூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.27ம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 3மணி வரை, எல் ஆர் ஜி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 10th, +2, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வித்தகுதி கொண்டவர்களும் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.23க்குள் இந்த லிங்கை <
News December 16, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளவரசன்(37). இவர் மத்திய பஸ் நிலையம் அருகே நடந்து செல்லும் போது, இவரிடம் இருந்து 2 பேர் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசாமி(33), முத்து கௌதம்(20) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.