News December 14, 2025

தாராபுரம் அருகே சோகம்: பள்ளி மாணவர் உயிரிழப்பு!

image

குண்டடம் தாலுகா ருத்ராவதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி(15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் ஸ்ரீ ஹரி உடல்நிலை மோசமானது. இதனால் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீ ஹரி உயிரிழந்தார். இது குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 25, 2025

வெள்ளகோவில் அருகே சோகம்

image

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி(76). இவர் தனது வீட்டிற்கு அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு பல வருடங்களாக முழங்கால் வலி இருந்து வந்தது. இதனால் மனம் உடைந்த குப்புசாமி செடிகளுக்கு வைக்கும் சல்பாஸ் என்ற விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

நல்லூர் அருகே வாசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

image

திருப்பூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பிரிவு அருகே, சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மோனிஸ்குமார், சூர்யா அரவிந்த், சேக் அலாவுதீன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!