News December 14, 2025
வையப்பமலை அருகே சோகம்: தொழிலாளி விபரீத முடிவு!

வையப்பமலை அருகே இராமாபுரம் அடுத்த மாந்தோப்புகாலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கோட்டுவேல் (37) குடும்ப தகராறில் மனவிரக்தி அடைந்து நேற்று விஷம் குடித்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.13) இறந்து விட்டார். இது குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
நாமக்கல்: அரசின் முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!
News January 1, 2026
நாமக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
News January 1, 2026
பள்ளிபாளையத்தில் அதிரடி முடிவு!

பள்ளிபாளையம் அடுத்துள்ள தொட்டிக்காரன் பாளையத்தில் கறிக்கோழி பண்ணையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கறிக்கோழி வளர்ப்புக் கூலியாக ஒரு கிலோவிற்கு ரூ.20-ம், நாட்டுக்கோழிக்கு ரூ.75-ம், காடைகளுக்கு ரூ.7-ம் வழங்க வேண்டும் இதனை ஏற்காத கறிக்கோழி நிறுவனங்களைக் கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பண்ணையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.


