News December 14, 2025
தென்காசி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் சந்தை தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர், குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News April 13, 2026
தென்காசி : ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க. SHARE IT
News April 13, 2026
தென்காசி : 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு

தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பலபத்திர ராமபுரம் கிராமத்தில், நேற்று மாற்றுக் கட்சியை சார்ந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், திமுக ஒன்றிய செயலாளர் MPM. அன்பழகன் தலைமையில், மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இணைந்தவர்களுக்கு கருப்பு-சிவப்பு வேஷ்டி அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News April 13, 2026
தென்காசி: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

தென்காசி மாவட்ட பட்டதாரிகளே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <


