News April 29, 2024

கும்பகர்ணன் ஆட்சி தேவையில்லை

image

ஆட்சியில் ஒரு நலத்திட்டத்தை கூட ஜெகன் மோகன் ரெட்டி நிறைவேற்றவில்லை என அவரது சகோதரியும், ஆந்திர காங்கிரஸ் தலைவருமான ஷர்மிளா விமர்சித்துள்ளார். கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்கி, 6 மாதமாவது விழித்திருப்பார் என்ற அவர், ஜெகன்மோகன் ரெட்டியோ எதுவுமே செய்யாமல் 5 ஆண்டுகளாக தூக்கத்திலேயே இருக்கிறார் என்றார். அண்ணனை (ஜெகன்) எதிர்த்து காங்கிரஸை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தம் ஷர்மிளாவுக்கு ஏற்பட்டுள்ளது.

Similar News

News February 12, 2026

வெங்காயம், தக்காளி விலை சரசரவென குறைந்தது

image

வெங்காயமும் தக்காளியும் சமையலுக்கு என்றுமே அத்தியாவசியமானவை. சீசன் இல்லாத நேரங்களில் இவற்றின் விலை நம்மை கிறுகிறுக்க வைக்கும். இந்நிலையில், தற்போது இவ்விரண்டின் விலையும் சரசரவென குறைந்துள்ளது. வெங்காயம் 6 கிலோ ₹100-க்கும், தக்காளி 1 கிலோ ₹8 – 10-க்கும் விற்பனையாகிறது. இதனால் சில்லறை கடைகளில் வெங்காயம் கிலோ ₹20, தக்காளி கிலோ ₹12 – ₹15 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் ஊரில் விலை என்ன?

News February 12, 2026

MGR, மோடி ஒத்த சிந்தனை கொண்டவர்கள்: நயினார்

image

பாஜக, அதிமுக இரண்டுமே மக்களுக்காக உழைக்கும் இயக்கங்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பெண்களுக்காக, இளைஞர்களுக்காக, தமிழுக்காக எதையும் செய்வதில் MGR-ம், மோடியும் ஒரே சிந்தனை கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மலேசியாவுக்கு சென்றால் கூட தமிழை பற்றி மோடி பெருமையாக பேசுவதாக குறிப்பிட்ட அவர், தமிழுக்கு எதிரானவர் PM என CM ஸ்டாலின் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

News February 12, 2026

திமுக அமைச்சரின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி

image

காங்கிரஸ் வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதற்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற செல்வப்பெருந்தகையிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அப்போது அவருடைய (ராஜகண்னப்பன்) கருத்தையெல்லாம் ஏன் பொருட்படுத்துகிறீர்கள் என ஒரே வரியில் கடந்து சென்றார்.

error: Content is protected !!