News December 14, 2025
BIG NEWS: சென்னையை குறிவைக்கும் பாஜக?

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம், சோளிங்கர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, குறிப்பாக முதல்வர் தொகுதியான கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பாஜகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என அடையாளம் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்க கருத்து என்ன?
Similar News
News March 3, 2026
சென்னையில் மின்சாரப் பிரச்னையா..?

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், கே.கே.நகர் கோட்டங்களில் இன்று (மார்ச் 3) நடைபெறும் குறைதீர் கூட்டங்களில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது மின் இணைப்பு மற்றும் குறைகள் தொடர்பான கோரிக்கை, குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
சென்னையில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

சென்னை மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
சென்னைக்கு புதிய பறக்கும் ரயில் சேவை!

பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் வருகிற மார்ச் 5ஆம் தேதி பாதுகாப்பு கமிஷனர் சோதனை மேற்கொள்கிறார். வருகிற மார்ச் 7ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தின் 10ஆவது நடைமேடை வழியாக அடுத்த 20 முதல் 22 நாட்களுக்கு ரயில்களை இயக்கும் வகையில் பயன்பாட்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


