News April 29, 2024
சீனாவை நம்பி இருக்கும் இந்தியா

பல ஆண்டுகளாகத் தொலைத்தொடர்பு, இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு இந்தியா, சீனாவைத்தான் நம்பியுள்ளது. இந்நிலையில், இவற்றின் இறக்குமதி கடந்த 15 ஆண்டுகளில் 30% அதிகரித்துள்ளதாக GTRI அறிக்கை தெரிவிக்கிறது. 2019 – 2024 காலகட்டத்தில் சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி ஆண்டுதோறும் சுமார் 16 பில்லியன் டாலர் ஆகும். அதே நேரம், சீனாவில் இருந்து இறக்குமதி 101 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.
Similar News
News January 28, 2026
மூன்று பக்கமும் முட்டி மோதும் OPS

தனது ஆதரவாளர்கள் பலரும், ஒவ்வொரு கட்சியில் தஞ்சம் அடைந்துவிட்ட நிலையில் OPS தற்போது புது ரூட்டை பிடித்துள்ளார். திமுகவிடம் தான் கைகாட்டும் 5 பேருக்கு சீட் கொடுங்க என்றும், தவெகவிடம் எனக்கு கட்சி பொறுப்பை தாண்டி பெரிய இடம் வேண்டும் என்றும் கேட்டுள்ளராம். இதுபோக, NDA பக்கம் சாய்ந்த TTV-யிடம், 3 பேருக்கு மட்டும் சீட் கொடுங்க, நாங்க குக்கர் சின்னத்துலேயே நிற்கிறோம் என்று தகவல் கொடுத்துள்ளராம்.
News January 28, 2026
பகீர் குற்றச்சாட்டை மறுத்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள் மெட்டா நிறுவனத்தால் படிக்கப்படுவதாக US-ல் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் அதனை மறுத்துள்ளது. ஒரு மொபைலில் இருந்து பகிரப்படும் ஒவ்வொரு தகவலும் குறியாக்கம் செய்யப்படுகின்றன என்றும், நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ, அவர்களால் மட்டுமே அவற்றைப் படிக்க முடியும். மெட்டா நிறுவனத்தால் அவற்றை அணுக முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
News January 28, 2026
வங்கதேசத்தில் சூறையாடப்பட்ட இந்து கோவில்!

வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் கோவிலில் 14 சிலைகள், 20,000 டாக்கா பணம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகிய திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மன்பாரியா நகரில் உள்ள இக்கோவிலில் 2017-ம் ஆண்டுக்கு பிறகு 2-வது முறையாக திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வரும் நிலையில், தங்களுக்குப் பாதுகாப்பு இன்றி அச்சமாக உள்ளதாக கோவில் குருக்கள் தெரிவித்துள்ளனர்.


