News December 14, 2025
அரியலூர்: தேசிய நீதிமன்றத்தில் 1758 வழக்குகள் தீர்வு

அரியலூர் மாவட்ட நீதிமன்றங்களில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் சார்பில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மலர் வாலண்டினா தலைமை தொடங்கி வைத்தார். மேலும் இதில் மொத்தம் 1,728 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
Similar News
News December 24, 2025
அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 24, 2025
அரியலூர்: இதை MISS பண்ணிடாதிங்க!

அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், நாளை மறுநாள் (டிச.26) எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இந்த முகாம் தொடங்கி நடைபெற உள்ளது. முகாமில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு, சமையல் எரிவாயு தொடர்பான குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 24, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும், இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (23.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள், மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.


