News April 29, 2024
பாஜக அழைத்தால் தேர்தல் பிரசாரம் செய்வேன்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஜெயப்பிரதா வழிபட்டுள்ளார். அத்துடன், அவர் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர், கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் ஆந்திர மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி அழைப்பு விடுத்தால், தேர்தல் பிரசாரம் செய்வேன் எனத் தெரிவித்தார்.
Similar News
News February 9, 2026
தமிழகத்திற்கு 8.5 மடங்கு நிதி: அஸ்வினி வைஷ்ணவ்

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக் கோரி PM மோடிக்கு CM <<19081916>>ஸ்டாலின்<<>> கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், 2014-க்குப் பின் TN-க்கான நிதி 8.5 மடங்குக்கும் மேலாக உயர்ந்து, தற்போது ₹7,611 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். தமிழகத்திற்கு விரைவான ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்க மாநில அரசின் ஆதரவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News February 9, 2026
BREAKING: தமிழக கபடி வீராங்கனை விபத்தில் மரணம்

தமிழக கபடி வீராங்கனை தீபிகா விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சித்தோடு அருகே ஸ்கூட்டரில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கூரியர் வேன் தலை மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே தீபிகா உயிரிழந்துள்ளார். தனியார் கல்லூரியில் MCA 2-ம் ஆண்டு படித்துவந்த அவர், தமிழ்நாடு கபடி அணியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். <<-se>>#RIP<<>>
News February 9, 2026
தமிழன் மலேசியாவில் ஒன்னு, ஒடிசாவில் ஒன்னா? ரகுபதி

மலேசியாவில் தமிழர்களை புகழ்ந்து பேசும் PM மோடி, ஒடிசாவுக்கு சென்றால் தமிழர்களை திருடன் என பேசுவது ஏன் என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். PM மோடி தனது மலேசிய பயணத்தின்போது <<19077367>>தமிழ், தமிழர்களின் பண்பாடு சிறந்தது<<>> என புகழாரம் சூட்டியிருந்தார். அது குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, இது முற்றிலும் நாடகம் எனவும், பாஜகவின் நாடகத்தை தமிழக முருக பக்தர்கள் அறிவார்கள் என்றும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?


