News December 14, 2025
தேனி: குழந்தை இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை.!

தேனி பகுதியை சேர்ந்தவர் நந்தக்குமார் (27). இவரது மனைவி ஜெயப்பிரதா இந்த தம்பதிக்கு 2.5 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த மாதம் குறை பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்து, பிறந்த சில தினங்களில் உயிரிழந்தது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த நந்தகுமார் நேற்று முன்தினம் (டிச.12) வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 24, 2025
தேனி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தேனி பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்ததால் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமித்து செய்து 11 கடைகளை அகற்றினர் மேலும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் ஆக்கிரமித்து அரசுக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதால் அகற்றினர்.
News December 24, 2025
தேனி: அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலா?

தேனி மக்களே, அரசு பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். இங்கு <
News December 24, 2025
தேனி: அரசு நிலத்தில் மணல் அள்ளிய 9 போ் மீது வழக்கு

போடி அருகே நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட அம்பரப்பா் மலைப் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் சிலா் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த தகவலையடுத்து போடி தாலுகா போலீஸாா் நேற்று (டிச.23) அங்கு சென்றனர். அங்கு ஜேசிபி, டிப்பர் லாரி மூலம் 9 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிய நிலையில் வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை.


