News December 14, 2025
மயிலாடுதுறை: மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி பிரேமா. இருவருக்கும் சமீபகாலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது கோபமடைந்த ஆதித்யன் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதித்யனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 2, 2026
மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தோர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
மயிலாடுதுறை: 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் 10587 மாணவர்கள்

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் இன்று முதல் தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அவ்வகையில், மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 41 மையங்களில் நடைபெற உள்ளது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 4868 மாணவர்களும் 5617 மாணவிகளும் மாற்றுத்திறனாளிகள் சலுகை கோறும் மாணவ மாணவிகள் 102 என மொத்தம் 10587 மாணவர்கள் பொது தேர்வுகள் எழுத உள்ளனர்.
News March 2, 2026
மாயவரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

மாயவரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <


