News December 14, 2025
SIR படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசிநாள்

TN முழுவதும் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2-வது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், வாக்குச்சாவடிகளில் BLO-க்கள் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளனர். அதில், தங்களது படிவங்களை மறக்காமல் ஒப்படைத்துவிடுங்கள். இல்லை எனில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட வாய்ப்புள்ளது. வரைவு வாக்காளர்கள் பட்டியல் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
Similar News
News December 27, 2025
கடலூர்: உரம் தேவையான அளவு கையிருப்பு – ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,388 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,254 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,683 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 6,144 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 1,509 மெட்ரிக் டன் என மொத்தம் 16,013 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
15 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு கட்டிய இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் முதல் 3 டெஸ்ட்டுகளை தோல்வியடைந்த இங்கிலாந்து, 4-வது போட்டியில் <<18683771>>போராடி வெற்றி<<>> பெற்றது. அதுமட்டுமின்றி ஆஸி., மண்ணில் 15 ஆண்டுகளாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளுக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அங்கு இதுவரை 18 போட்டிகளில் இங்கி., தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. கடைசியாக 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியிருந்தது.
News December 27, 2025
மகளிர் உரிமைத்தொகை இனி ₹2,500.. புதுவை CM அறிவித்தார்

புதுச்சேரியில் மகளிர் உரிமைத்தொகை ₹1,000-ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவையில் நடைபெற்ற வீரதீர குழந்தைகள் தினவிழாவில் பேசிய அவர், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். TN-ல் உரிமைத்தொகையாக ₹1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இது உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


