News April 29, 2024
வீட்டில் உள்ள தங்கத்தை தேடப்போகிறார்கள்

காங்கிரஸ் அர்பன் நக்சல் சிந்தனை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். செய்தி ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் நாட்டை எக்ஸ்ரே கொண்டு பார்க்கும் என ராகுல் காந்தி சொல்வதன் அர்த்தம் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தங்கத்தை எங்கே வைத்திருக்கிறார்கள் என ஆராயப் போகிறோம் என்பதே அதன் அர்த்தம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News August 27, 2025
பிஹார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் பங்கேற்க இன்று CM ஸ்டாலின் பிஹார் செல்கிறார். காலை 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர், 10.30 மணிக்கு நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர், பிற்பகல் 2.40 மணிக்கு ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
News August 27, 2025
உலகிலேயே மிகவும் உயரமான விநாயகர் சிலை?

விநாயகர் சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாடும் இந்தியாவில் உலகின் மிக உயரமான விநாயகர் சிலை இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தாய்லாந்தின் குலோங் குவானில் தான் உலகின் மிக உயரமான விநாயகர் சிலை உள்ளது. 39 மீட்டர் உயரம், 100 டன் எடை வெண்கலத்தால் ஆன இந்தச் சிலை 4 கைகளை கொண்டுள்ளது. அதேநேரம், ஆசிய கண்டத்தில் ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய விநாயகர் சிலை கோவை, புளியங்குடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 27, 2025
கருப்பு வண்ணத்து பூச்சியாக ஸ்ருதி ஹாசன்

‘கூலி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஸ்ருதி ஹாசனை கிளாமரான நடிகை என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பார். ஆனால் ‘கூலி’ படத்தில் ஸ்ருதி ஹோம்லியாக தான் நடித்திருப்பார். இப்போது தனது ரசிகர்களுக்காக கிளாமரான போட்டோஷூட் ஒன்றை ஸ்ருதி நடத்தியுள்ளார். அதனை இன்ஸ்டாவில் பகிர்ந்து இளசுகளின் லைக்குகளை அள்ளி வருகிறார். மேலே இருக்கும் விதவிதமான அவரது போட்டோக்களை நீங்களும் கண்டு மகிழுங்கள்..