News December 14, 2025
CINEMA 360°: சைலண்டாக முடிந்த அசோக் செல்வன் படம்

*விமல் நடிக்கும் ‘வடம்’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 11.11 மணிக்கு சசிக்குமார் வெளியிடுகிறார். *பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது. *அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. *சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் 3-வது பாடலான ‘ரத்னமாலா’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
Similar News
News March 2, 2026
1 ரூபாய் செலவில்லாமல் ₹7 லட்சம் கிடைக்கும்

ஒரு ரூபாய் கூட பிரீமியம் செலுத்தாமல் EPFO-வில் ஊழியர்கள் ₹7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். பணியில் இருக்கும் ஊழியர் இறந்தால், அவரது குடும்பம் அல்லது நாமினி, ₹2.5 லட்சம் – ₹7 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெற முடியும். ஊழியரின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை கணக்கிடப்படும். EPFO போர்ட்டலில் உள்ள “Death claim filing by beneficiary”-ல் இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE.
News March 2, 2026
இபிஎஸ் அதிரடி.. செந்தில் பாலாஜி பதற்றம்

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், அதனை சரிசெய்யும் பொருட்டே EPS டெல்லி சென்றுள்ளாராம். திமுகவிற்கு உதவும் IAS, IPS அதிகாரிகள் பட்டியலை கொடுப்பதோடு அமைச்சர் KN நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தவும், அமித்ஷாவிடம் EPS வலியுறுத்தவுள்ளாராம். இதனால் தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 2, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி

2021 தேர்தலின்போது 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது, சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம் என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதேநேரம், இதை எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.


