News December 14, 2025
கேரளா உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக படுதோல்வி

கேரளா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. உப்புதரா – 9, சின்னக்கானல் – 3, தேவிகுளம் – 1, மறையூர் – 1, தேவிகுளம் – 1 என 15 இடங்களில் திமுகவும், இடுக்கி-19, பாலக்காடு – 4, திருவனந்தபுரத்தில் – 2 என 25 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டு இருந்தன. அங்குள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4-ல் வெற்றி பெற்றுள்ளன.
Similar News
News March 5, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.. அதிர்ச்சி

OPS திமுகவில் இணைந்ததால், அவரின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைவது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்நிலையில், OPS-ன் தீவிர ஆதரவாளராக இருந்த Ex MLA மற்றும் MP-யான வெ. ஏழுமலை, 2 நாளுக்கு முன் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து எம்.பி.பாலாஜி, முன்னாள் அமைச்சர் T.ராமசாமி மகன் T.R.சீனிவாசன், ராமநாதபுரம், தேனியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் EPS-ஐ சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
News March 5, 2026
நாணயங்கள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது தெரியுமா?

தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் வட்ட வடிவில் இருப்பது தற்செயலாக நடந்ததில்லை. 1950-ம் ஆண்டு ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன *கூர்மையான முனைகள் இல்லாததால், நாணயங்களும் சேதமடையாது, அவற்றை உபயோகிப்பவருக்கும் கையில் கீரல் ஏற்படாது *நாணயங்களை வட்ட வடிவ செய்வது எளிது, செலவும் குறைவு *உற்பத்தியின் போது, வட்ட வடிவம் என்பதால், மெஷினிலும் சிக்காது. SHARE.
News March 5, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $47 (இந்திய மதிப்பில் ₹4,329.80) உயர்ந்து $5,177.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 உயர்ந்து $84.31-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.


