News December 14, 2025
சம்பளம், சலுகைகளை விட்டுக்கொடுத்த EX-CM

ஒடிசா மக்கள் தன் மீது காட்டிய அன்புக்கு கடன்பட்டுள்ளதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரான தனக்கு அரசு உயர்த்திய சம்பளம், தரும் சலுகைகளை விட்டுக்கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அதை பொதுமக்களின் நலனுக்கு அரசு பயன்படுத்தட்டும் என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே, பூர்வீக சொத்தான ஆனந்த் பவனையும் மக்களின் பயன்பாட்டுக்கு நவீன் பட்நாயக் வழங்கியது, குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 29, 2025
திரிபுரா இனவெறிக்கொலை: 5 பேர் கைது

திரிபுராவை சேர்ந்த அஞ்சல் சக்மா (24) என்ற பழங்குடியின மாணவரை, சீனர் என கூறி போதை கும்பல் கத்தியால் குத்தினர். இதில் சிகிச்சையில் இருந்த அஞ்சல் 18 நாள்களாக சிகிச்சையில் இருந்த அஞ்சல் உயிரிழந்துள்ளார். இவ்விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்நிலையில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு திப்ரா மோத்ரா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
News December 29, 2025
இந்த பிரச்னை இருந்தா முள்ளங்கி சாப்பிடாதீங்க

முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அதனை சாப்பிடுவது உடலுக்கு சிறந்ததுதான். ஆனால், தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் இதனை தொடவே கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது உங்கள் உடலில் தைராய்டு அளவினை அதிகரிக்க செய்துவிடும். எனவே மருத்துவரிடம் ஆலோசித்து, உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப முள்ளங்கியை எடுத்துக்கொள்ளுங்கள். பயனுள்ள தகவலை அனைவருக்கு SHARE பண்ணுங்க.
News December 29, 2025
EPS-க்கு எகத்தாளம்: ரகுபதி

துரோகத்தின் வடிவமாக பதவி சுகத்திற்காக ரகுபதி திமுகவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவருக்கு நாவடக்கம் தேவை என்றும் EPS சாடியிருந்தார். இந்நிலையில், ஜெ., கொண்டு வந்த லேப்டாப் திட்டத்தை 2019 வரை மட்டுமே தொடர்ந்த EPS, அதன் பிறகு தொடரவில்லை என ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு திட்டத்தையே முடக்கிவிட்டு EPS-ன் பேச்சை பாருங்கள், எகத்தாளத்தை பாருங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.


