News December 14, 2025
குமரி மாவட்ட அளவிலான அஞ்சலக குறை தீர்க்கும் நாள் கூட்டம்

இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 24.12.2025 அன்று 10.30 மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் குறைகள் இருப்பின் அதனை இக்கூட்டத்தில் நேரில் தெரிவிக்கலாம் (அல்லது) தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
குமரி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..
News March 8, 2026
குமரி: 24 துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் உட்பட ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணியாற்றும் துணை வட்டார வளர்ச்சி நிலையான அதிகாரிகளை நிர்வாக நலன் கருதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று பணியிட மாற்றம் செய்து உள்ளார். மொத்தம் 24 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News March 8, 2026
குமரி: இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

கட்டி மாங்காடு அருகே அரசர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சோபி (28). இவருக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோபி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆனதால் சோபி தற்கொலை குறித்து பத்மநாபபுரம் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.


