News December 14, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு 10 மணி முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News March 6, 2026
தஞ்சை: பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

தஞ்சையில் பாஜக மாநில செயலாளர் தலைமையில், பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை தருவதை முன்னிட்டு, பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான திட்டமிடல்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் விரிவாக விவாதித்தனர்.
News March 6, 2026
தஞ்சை: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!

பொந்திரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (25). இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளது. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எஸ்.பி ராஜாராம் பரிந்துரையின்பேரில் வழக்கு ஆவணங்களை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பரிசீலனை செய்து, சூர்யாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News March 6, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

தஞ்சை மாவட்டத்தில் 586 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதாக புகார் வரப்பெறுகிறது. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


