News April 29, 2024

முண்டந்துறை: வரையாடு கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

image

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் முண்டந்துறை வனச்சரக பகுதிகளில் இன்று வரையாடு கணக்கெடுக்கும் பணி வனச்சரகர் கல்யாணி தலைமையில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியானது ஐந்தலைப் பொதிகை, அடுப்புகள் மொட்டை, அகத்தியர் மலை, செம்பூஞ்சி மொட்டை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த பணி முடிவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News January 14, 2026

நெல்லை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

நெல்லை: உங்கள் குழந்தையை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்

image

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகத்தை அணுகவும்.

News January 14, 2026

நெல்லை: சோதனையில் சிக்கிய கள்ளத் துப்பாக்கி

image

நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் பொங்கல் பாதுகாப்பை முன்னிட்டு விடிய விடிய சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அமீர், பாலா ஆகிய இருவரிடமிருந்து கள்ளத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர்களிடமும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

error: Content is protected !!