News April 29, 2024
ஊழலுக்கு எதிரான பாஜகவின் போர் வெல்லும்!

2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதிய, திறன்மிக்க, வளர்ந்த இந்தியாவை உருவாக்க பாஜக போராடிவருகிறது எனக் கூறிய ராஜ்நாத் சிங், ஊழலுக்கு எதிராக பாஜக அரசின் போர் வெல்லும் என்றார். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் வறுமையை முழுமையாக ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
Similar News
News November 15, 2025
பிஹாரில் காங்., தோல்வி: தமிழகத்தில் எதிரொலிக்குமா?

ஒருகாலத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக இருந்த காங்., தற்போது சீரியஸான நிலையில் இருக்கிறது. பிஹாரில் 61 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி வெறும் 6-ல் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால், தனித்து போட்டியிட்ட ஒவைசியின் AIMIM 5 இடங்களை கைப்பற்றியது. பிஹார் தேர்தல் தோல்வி எதிரொலியால், திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு வரும் காங்.,க்கு சீட் குறைக்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 15, 2025
ஹைதராபாத் சாலைகளுக்கு கார்ப்பரேட் பெயர்கள்

ஹைதராபாத்தில் உள்ள சாலைகளுக்கு Google, Meta, TCS உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களை சூட்டவுள்ளதாக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். ஹைதராபாத்தை தொழில் வளர்ச்சி நகரமாக மேம்படுத்தும் நோக்கிலும், பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கிலும் இவ்வாறு அறிவிப்பதாக கூறினார். 2034-ம் ஆண்டுக்குள் மாநில பொருளாதாரம் 1 டிரில்லியனாகவும், 2047-க்குள் 3 டிரில்லியனாகவும் உயரும் என்றார்.
News November 15, 2025
5000 ஆண்டுகள் வரலாறு.. இந்த நாடுகள் இவ்வளவு பழசா!

உலகில் பல்வேறு நாகரிகங்கள் தோன்றி மறைந்துவிட்டன. பல நகரங்கள் எழுச்சி அடைந்து, இருந்த இடமே தெரியாமல் வீழ்ச்சியும் அடைந்துவிட்டன. ஆனால், சில நாடுகள் அனைத்தையும் கடந்து, இன்றும் மனித இனத்தின் ஆணிவேராக இருந்து வருகின்றன. அப்படி உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து எந்த நாடு மிகவும் பழமையானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


