News December 14, 2025

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவு: பினராயி விஜயன் ரியாக்‌ஷன்

image

திருவனந்தபுரத்தில் NDA கூட்டணியின் வெற்றி என்பது மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலையளிக்கும் வகையில் உள்ளதாக CM பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வகுப்புவாத சக்திகளிடமிருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும், வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தையும் இந்த முடிவு வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 20, 2025

5 ராசியினருக்கு எச்சரிக்கை

image

சனி பகவானின் தாக்கத்தால், 2026-ம் ஆண்டு 5 ராசியினருக்கு சோதனை காலமாக அமையும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மேஷம், கும்பம், மீனம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் குடும்பத்தில் பதற்றம், மன அழுத்தம், அவசர முடிவுகளில் தடுமாற்றம் என பல சவால்களை சந்திக்கக் கூடுமாம். இதற்கு பரிகாரமாக, சனிக்கிழமைகளில் சனி பகவான், ஆஞ்சநேயரை வழிபடலாம் எனவும் ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

News December 20, 2025

அக்சரை VC ஆக நியமித்தது ஏன்? அகர்கர்

image

டி20 WC-க்கான IND அணியின் துணை கேப்டனாக (VC) அக்சர் படேலை அறிவித்தது ஏன் என அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். டி20 VC ஆக இருந்த கில் தற்போது அணியில் இல்லை. எனவே, அவருக்கு முன்பாக அந்த பொறுப்பை ஏற்றிருந்த அக்சர் படேல், தற்போது VC ஆக நியமிக்கப்பட்டுள்ளதாக அகர்கர் கூறியுள்ளார். முன்னதாக, கடந்த ஜனவரியில் நடந்த ENG-க்கு எதிரான டி20 தொடரில், அக்சர் படேல் VC ஆக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 20, 2025

Cinema Roundup: ‘ஜனநாயகன்’ சாட்டிலைட் உரிமம் ₹64 கோடி

image

*தனது 47-வது படத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா போலீஸாக நடிக்கிறார். *‘அரசன்’ ஷூட்டிங்கில் வெற்றிமாறன், சிம்புவை VJS-ஐ சந்தித்த போட்டோ வைரல். *‘பராசக்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா ஜனவரி 3-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல். *‘ஜனநாயகன்’ சாட்டிலைட் உரிமையை ₹64 கோடிக்கு ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளதாக தகவல். *ஜீவா நடிக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் கதை முதலில் மம்முட்டிக்கு சொல்லப்பட்டதாம்.

error: Content is protected !!