News December 13, 2025
மக்கள் நாயகன் காலமானார்… கண்ணீருடன் இரங்கல்

மனிதனுக்கு மனிதனே உதவ முன்வராத அவசர காலத்தில், கிளிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த <<18542461>>ஜோசப் சேகர்(73)<<>> இப்போது பூவுலகில் இல்லை. புற்றுநோய் பாதிப்பால் மறைந்த அவர், பல்லாயிரக்கணக்கான கிளிகளை அனாதையாக விட்டுச் சென்றிருக்கிறார். ஜோசப் சேகரின் மறைவுக்கு அரசியல் கட்சிகள், பறவைகள் நல ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த பறவை மனிதரின் வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதே நிதர்சனம்.
Similar News
News April 11, 2026
‘கனிமொழி தனி கட்சி’.. அரசியல் பரபரப்பு

2026 தேர்தலில் திமுக தோற்றால் கனிமொழி தனி கட்சி தொடங்குவார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒருபுறம் ஸ்டாலினும், மற்றொருபுறம் கனிமொழியும் அரசியல் களத்தில் நேரடியாக மோதினால், திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது எனக் கூறினார். முன்னதாக, மாநில அரசியலில் தடம் பதிக்க கனிமொழி விருப்பம் தெரிவித்து தேர்தலில் சீட் கேட்டதாகவும், அதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாகவும் பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
News April 11, 2026
வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்து தள்ளிய RCB வீரர்

அனுபவமிக்க பிளேயர்களுககே பயத்தை காட்டும் அளவுக்கு RR-ன் 15 வயது வீரர் சூர்யவன்ஷி விளையாடுகிறார். இந்நிலையில் அவரை பாராட்டிய RCB வீரர் புவனேஷ்வர் குமார், சூர்யவன்ஷி பந்துகளை கண்மூடித் தனமாக அடிக்கவில்லை; நேர்த்தியான ஷாட்களையே விளையாடுகிறார் என்றார். மேலும், 15 வயது சிறுவனாக இருந்தாலும் சூர்யவன்ஷி மிகவும் பக்குவப்பட்டவராக இருப்பதாகவும், பாராட்டுகளுக்கு அவர் தகுதியுடையவர் என்றும் கூறியுள்ளார்.
News April 11, 2026
மாதம் ₹20,500 கொடுக்கும் அசத்தல் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மாதம் ₹20,500 வரை பெற வழி செய்கிறது. இத்திட்டத்தில் மொத்தமாக ₹30 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் கழித்து 8.2% வட்டியுடன் ஆண்டுக்கு ₹2,46,000 வட்டி வருமானம். 12-ஆக வகுத்தால், மாதம் ₹20,500 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் சேரமுடியும். அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.


