News December 13, 2025
விழுப்புரத்தில் காவல் எல்லைகள் மாற்றி அரசாணை

விழுப்புரத்தில் நீண்டகாலத்திற்கு பிறகு காவல் நிலைய எல்லைகள் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நகர பகுதிகள் மட்டும் வரையறை செய்துள்ளதால், கிராமப் புறங்கள் ஒரே காவல் நிலைய கட்டுப்பாட்டில் பணி சுமையுடன் தொடர்கிறது. விழுப்புரம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 60 கிராமங்களில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு சீரமைப்பு பணிகளை, விழுப்புரம் தாலுகா நகரம் மற்றும் மேற்கு காவல் நிலையம் ஈடுபடுகிறது.
Similar News
News March 6, 2026
விழுப்புரம் : இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்

விழுப்புரம் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <
News March 6, 2026
விழுப்புரம் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நேற்று (05.03.2026) நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனீத் , மாவட்ட வருவாய் அலுவலர் .அரிதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.
News March 6, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி ரா.மணிகண்டன்(38) புதுச்சேரி- மங்களூா் வாராந்திர விரைவு ரயிலை தண்ணீரால் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா் . அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். அவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


