News December 13, 2025

பாஜக டிமாண்ட் செய்யும் தொகுதிகள்

image

<<18554861>>அதிமுகவிடம் 53 தொகுதிகளை<<>> கேட்க பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் கொளத்தூர், தி.நகர், கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், ஸ்ரீரங்கம், போடி, தென்காசி, குன்னூர், குளித்தலை, கிளியூர் உள்ளிட்ட தொகுதிகள் அடங்கும். 2024 எம்பி தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்த சட்டமன்ற தொகுதிகளை கணக்கிட்டு இது தயாரிக்கப்பட்டுள்ளதாம். இதை பார்த்து EPS அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

Similar News

News January 5, 2026

நாள்தோறும் நாடகம் நடத்தும் திமுக: EPS

image

இன்று மாணவர்களுக்கு CM ஸ்டாலின், லேப்டாப் வழங்கவிருக்கும் நிலையில் EPS விமர்சித்துள்ளார். நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் கொடுக்காமல் இளைஞர்களை திமுக அரசு வஞ்சித்தது. ஆனால், தற்போது தேர்தல் வருகிறது என்றதும் இளைஞர்களின் வாக்கைப் பெற லேப்டாப் கொடுப்பது போல் நாடகத்தை அரங்கேற்றுகிறது. நாள்தோறும் திமுக நடத்தும் நாடகங்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என கூறியுள்ளார்.

News January 5, 2026

BJP + OPS + TTV கூட்டணி.. உறுதியாக தெரிவித்தார்

image

தவெகவா? NDA-வா? எந்த கூட்டணியில் TTV-ம், OPS-ம் இணையப்போகிறார்கள் என்பதுதான் இன்றைய ஹாட் டாபிக். இந்நிலையில், NDA கூட்டணியில் அவர்கள் இருவரும் இணைய வாய்ப்பிருப்பதாக Ex.MP KC பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார். இருவரும் அதிமுக உறுப்பினராக இணையாவிட்டாலும், NDA கூட்டணியில் இடம்பெறுவார்கள் என அவர் பேசியுள்ளார். மேலும், OPS, டிடிவி-ன் முக்கியத்துவத்தை EPS தற்போது உணர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

News January 5, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்வு

image

தங்கம் விலை மிகப்பெரிய மாற்றத்துடன் இந்த வார வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்று(ஜன.5) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹12,680-க்கும், சவரன் ₹640 அதிகரித்து ₹1,01,440-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டு நாளில் சரிவைக் கண்ட தங்கம் அதன்பிறகு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!