News December 13, 2025
திருவாரூர்: எஸ்ஐஆர் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சீரா ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சீராய்வு எஸ்ஐஆர் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News January 14, 2026
திருவாரூர்: சுடுகாட்டில் சடலமாக கிடந்த முதியவர்

கோட்டூர் அருகே மழைவராயநல்லூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று சடலமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழயாக சென்ற பொதுமக்கள் கோட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி, இதுகுறித்து வழக்கு பதிந்து சடலமாக கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.
News January 14, 2026
திருவாரூர் ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாவட்டத்தில் வசித்து வரும் பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள் மீது உள்ள கடனை நீக்கிவிட்டு திரும்ப ஒப்படைக்க அரசு அறிவித்துள்ளது. எனவே இது தொடர்பான விவரங்களுடன் உடனே ஆட்சியர் அல்லது ஆர்டிஓ அலுவலகத்தை அணுகலாம்.” என அறிவித்துள்ளார்.
News January 14, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


