News April 29, 2024
திருச்சி அருகே விபத்து; மரணம்

திருச்சி பொன்மலை பட்டியை சேர்ந்த எபினனேசர் (27) நேற்று கருமண்டபத்திலிருந்து பஸ் நிலையம் நோக்கி பைக்கில் வந்தார் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதியது. பலத்த காயமடைந்த எபினேசரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி எபினேசர் நேற்று இரவு இறந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 21, 2025
திருச்சியில் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

திருச்சி மாவட்ட அளவிலான கோடைகால கட்டணமில்லா பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, வூசூ, கையுந்துபந்து, மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி முகாமில்
18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். இதில் தினமும் உணவு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளனர்.
News April 20, 2025
திருச்சி: சுடுகாட்டில் அமைந்துள்ள காலபைரவர் கோவில்

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் காலபைரவருக்கென தனிக்கோவில் அமைந்துள்ளது. ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்ற இத்தளத்தில் அமைந்துள்ள காலபைரவரை அஷ்டமி தினத்தன்று எள் விளக்கு, எலுமிச்சை பழம், தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE NOW!
News April 20, 2025
TNPSC குரூப் 4 மாதிரி தேர்வு-ரொக்கப் பரிசு அறிவிப்பு

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், ரோட்டரி கிளப் சார்பில், TNPSC குருப் 4 போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு 21.04.2025 காலை 10 முதல் 1.30 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 5 பேருக்கு முதல் பரிசாக ரூ.1000, 2ம் பரிசாக ரூ.750, 3ம் பரிசாக தலா ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்ங்க…