News December 13, 2025
மதுரையில் சித்த மருத்துவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை ஆட்சியா் பிரவீன் குமார் வெளியிட்ட செய்தியில், மாவட்ட நலச் சங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆயுஷ் குழுமத்தில் காலியாக உள்ள சித்த மருத்துவா் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள், மாவட்ட நிா்வாக செயலா், மாவட்ட சுகாதார அலுவலா், விஸ்வநாதபுரம், மதுரை-14 (தொலைபேசி எண் 0452 – 2640778) என்ற முகவரிக்கு வருகிற 23-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Similar News
News December 16, 2025
சாக்கடையில் மூழ்கி பலியான மூதாட்டி

மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் இந்திராவதி(75) கணவனை இழந்த இவர் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு வீட்டில் தனித்து வசித்து வந்தார். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கிருதுமால் நதி சாக்கடைக்குள் மூழ்கி இறந்த கிடந்துள்ளார். உடலை கைப்பற்றி திடீர் நகர் போலீசார் இவர் எப்படி சாக்கடைக்குள் விழுந்து இறந்தார் ? என்பது குறித்து இன்று விசாரிக்கின்றனர்.
News December 16, 2025
மதுரை : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

மதுரை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News December 16, 2025
மதுரை: வீட்டில் மயங்கி விழுந்தவர் பரிதாப பலி

மதுரை தபால் தந்தி நகர் சிவகுருநாதன் 50 மனைவியுடன் கருத்து வேறுபாடு 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார். சிறுவயது முதல் இவர் நரம்பு பாதிப்புக்கு சிகிச்சை எடுக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணன் சிவா வந்த போது, வீட்டில் சிவகுருநாதன் மயங்கி கிடந்துள்ளார் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் டாக்டர்கள் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் போலீசார் விசாரிக்கின்றனர்.


