News December 13, 2025

செங்கல்பட்டு: g-pay பயனாளர்களே இந்த Trick தெரிஞ்சிக்கோங்க!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News December 14, 2025

செங்கல்பட்டு: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

செங்கல்பட்டு: ஆந்திராவில் இருந்து 50 பசுமாடுகள் கடத்தல்!

image

செங்கல்பட்டு: ஆந்திராவில் இருந்து பொள்ளாச்சிக்கு, கண்டெய்னர் லாரியில் பசுமாடுகள் கடத்தப்படுவதாக ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்டெய்னர் லாரியை பரனூர் சுங்கச்சாவடியில் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் வந்து விசாரித்ததில், கண்டெய்னரில் 50 பசு மாடுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை லாரியோடு பறிமுதல் செய்த போலீசார், மாடுகளை வாங்கிய ஸ்டான்லியிடம் விசாரித்து வருகின்றனர்.

News December 14, 2025

செங்கல்பட்டு: AC வெடித்து தீப்பிடித்த வீடு!

image

செங்கல்பட்டு: கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (38). இவர் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, படுக்கை அறையில் இருந்த ஏ.சி. எந்திரம் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ஜெகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே ஓடி வந்துவிட்டனர். இதில், வீடு தீப்பிடித்த நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

error: Content is protected !!