News December 13, 2025
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகளா?

கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால், கடந்த முறையை விட சுமார் 30 தொகுதிகள் கூடுதலாக கேட்டு பாஜக, டிமாண்ட் வைத்ததாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில், 50 தொகுதிகள் தர முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் EPS, 30 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். டெல்லிக்கு விரைந்துள்ள நயினார், அமித்ஷாவிடம் இதுகுறித்து ஆலோசனை செய்யவிருக்கிறாராம்.
Similar News
News March 4, 2026
புதுச்சேரியிலும் மகளிர் உரிமைத் தொகை ₹5,000

தமிழகத்தை தொடர்ந்து மகளிர் உதவி தொகையை முன்கூட்டியே வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு என மகளிர் உரிமைத் தொகையாக மொத்தம் ₹5,000 வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் அதை பின்பற்றி, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மகளிர் நிதி உதவி தொகையான ₹5,000-ஐ முன்கூட்டியே வரவு வைக்க உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
News March 4, 2026
மகிழ்ச்சியா இருக்கணுமா? இவங்கள AVOID பண்ணுங்க

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க இந்த குணங்கள் கொண்டவர்களை தவிருங்கள்: 1)உங்களிடம் பொய் சொல்பவர்கள் 2) உங்களை அவமதிப்பவர்கள், உங்களுக்கு மரியாதை கொடுக்காதவர்கள் 3)உங்களை தம் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் 4)உங்களின் தன்னம்பிக்கையை கெடுப்பவர்கள், தலைகுனிய செய்பவர்கள். வேறு எந்த மாதிரி நபர்களை தவிர்க்க வேண்டும்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்களேன்.
News March 4, 2026
மேலும் ரூ.1,000 அறிவித்தார் ஸ்டாலின்.. இன்ப அதிர்ச்சி

டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை ₹1,000 உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 24,033 டாஸ்மாக் ஊழியர்கள் பயன் பெறுவர் என்றும், அவர்களுக்கு ESI மருத்துவ, சமூக பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


