News December 13, 2025

BREAKING: மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. அதனால், கவனமாக இருங்கள் நண்பர்களே!

Similar News

News December 20, 2025

அன்புமணியின் மகள் தேர்தலில் போட்டியா?

image

2024 மக்களவைத் தேர்தலில் தாய் சௌமியா அன்புமணி வெற்றி பெற தருமபுரி தொகுதியில் தீவிரமாக பரப்புரை செய்து கவனத்தை ஈர்த்தவர் சங்கமித்ரா. தற்போது சினிமாவில் தயாரிப்பாளராக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், 2026 தேர்தலில் அவர் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட பாமக நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். ஆனால், இது அவரது விருப்பத்தின் பேரில் வழங்கப்பட்டதா, நிர்வாகிகளின் ஆர்வமா என்பது தெரியவில்லை.

News December 20, 2025

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், மாற்றுக்கட்சியினரை இழுக்கும் வேலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற அமைச்சர்கள், தேர்தல் பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தினர்.

News December 20, 2025

இந்த வார ஓடிடி ட்ரீட்!

image

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க அரை டஜன் படங்கள், வெப் தொடர்கள் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. *பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’: டிச.19, சன் நெக்ஸ்ட் *மம்முட்டியின் ‘டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’: டிச.19, ஜீ 5 * ‘ஹார்டிலே பேட்டரி’ வெப் சீரிஸ்’: ஜீ5 *’திவ்ய திருஷ்டி’: சன் நெக்ஸ்ட் *’ஃபார்மா’ வெப் சீரிஸ்: ஹாட்ஸ்டார் *’ராஜு வெட்ஸ் ரம்பை’: Etv Win *’The Great Indian Kapil Show’: நெட்பிளிக்ஸ்

error: Content is protected !!